கோவில்பட்டி கருப்பசாமி கொலை வழக்கில் தொடர்புடைய ரஃபீக் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
நாகர்கோவிலில் இருந்து கோவை நோக்கி சென்ற அரசு பேருந்தில் நேற்று கோவில்பட்டியை சேர்ந்த கருப்புசாமி என்பவர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், கடந்த ரம்ஜான் பண்டிகையின்போது, சாத்தூரில் அப்துல்லா என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அப்துல்லா கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழி வாங்கவே இந்த கொலை நடந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, கருப்பசாமியின் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய 9 பேரை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள அப்துல்லாவின் தந்தை ரஃபீக்கை பிடிக்க தனிப்படையினர் தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில்,
அப்துல்லாவின் தந்தை ரஃபீக் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
