vip dharshan cancel in thiruppathy
திருப்பதியில் வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் விஐபி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இம்மாதம் 23 ஆம் தேதி முதல் தொடர் விடுமஐற என்பதால் ஜனவரி முதல் வாரம் வரை விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுமறை நாட்களில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சுமார் 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வழக்கமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அதன்படி சனி, ஞாயிறு, இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில் இம்மாதம் 23 ஆம் தேதி முதல் ஜனவரி முதல் வாரம் வரை தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ச்சியாக விடுமுறை உள்ளது.

இதனால் அந்த நாட்களில் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், விஐபி தரிசனம் ரத்து செய்யப்படவதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே ஜனவரி மாதம் முதல் விஐபி தரிசனத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. லட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்காக இயந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தான இணை செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
