Vijay every film released from bigg problem
தீபாவளிக்கு வெளியாக உள்ள நடிகர் விஜயின் மெர்சல் படத்துக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. தளபதி விஜய் மூன்று வேடங்களில் மிரட்டவிருக்கும் படம் மெர்சல். தீபாவளி பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்கில் மிக பிரமாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

வெளியீட்டுக்கு இன்னும் மூன்றே நாட்கள் உள்ள நிலையில் மெர்சல் தலைப்பில் இருந்து பல்வேறு தடைகள், சங்கடங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் மெர்சல் படத்தில் புறாக்கள் பறப்பது கிராபிக்ஸ் என்பதற்கான ஆதாரம் அளிக்காததால் அனுமதி கிடைக்கவில்லை. இதனால் கடமையான சிக்கலில் தவித்த தயாரிப்பு தரப்பு எப்படியும் இந்த படத்தை ரிலீஸ் செய்தே ஆகவேண்டும் என்ற முடிவில் இருந்தது.

கேளிக்கை வரி தொடர்பான பிரச்சனை விஸ்வரூபம் எடுத்திருந்த நிலையில் மெர்சல் வெளியாகுமா? ஆகாதா என்ற நிலையில், திரைத்துறையினருக்கும் - தமிழக அரசுக்கும் தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவெடுத்தது. இதனால் மெர்சலுக்கு இருந்த பிரச்சனை தீர்ந்தது.
தயாரிப்பாளர் சொன்னதுபோல இந்நிலையில், விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தடைகள் வருவதும் அதை தகர்த்தெறிந்து தளபதி படம் ரிலீஸ் ஆவதும் சாகசஜம் தானே என பட வெளியீட்டுக்குப்பின் கொண்டாடி வருகின்றனர்.

மெர்சல் முன்பதிவால் போராட்டத்தை விலக்கி கொள்ள திட்டமிட்டபடி வெளியாகிறது என்ற செய்திக்கு பதிலளிக்கும் விதமாக ட்வீட் போட்டுள்ள மற்றொரு ரசிகர் பட ரிலீஸ் வரைக்கு நம்மல மட்டும் பதட்டமாவே வச்சிருப்பானுங்க... என கலாய்த்துள்ளார்.
