vijayabaskar pressmeet about neet
நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓர் ஆண்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் வரும் 22 ஆம் தேதி தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கப்பட்டாலும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தெரிவித்தார்.
தமிழக மாணவர்களுக்காகத்தான், அரசு போராடி வருகிறது. +2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும், எந்த மாணவரும் பாதிக்கப்படக் கூடாது என்பதே அரசின் எண்ணம் என்றும் அமைச்சர் கூறினார்.

கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே நீட் தேர்வில் இருந்து விலக்குக் கோருகிறோம் என்று தெரிவித்த அமைச்சர் விஜய பாஸ்கர், தமிழக அரசின் கோரிக்கைக்கு ஒத்துழைத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
நீட் தேர்வு விவகாரத்தில் எந்த தாமதமும் இல்லை என்றும் நடைமுறையில் ஏற்படும் பிரச்னைகள்தான் உள்ள என்றும் அவர் கூறினார்.
சட்ட சிக்கல்கள் காரணமாகவே தாமதம் ஏற்படுகிறது அதே நேரத்தில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் வரும் 22 ஆம் தேதி தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கும் என அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
