தேர்தலில் தனித்து போட்டியிட்டால் விஜய் காலியாகி விடுவார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விஜய்யின் பாடு திண்டாட்டம் தான் என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்துக்கு பிறகு பாஜக, அதிமுக ஆகிய கட்சிகள் தவெக பக்கம் நின்றதால் விஜய் அதிமுக கூட்டணியில் இணையப்போகிறார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.
உதயநிதியை எதிர்த்து விஜய் போட்டி
மறுபக்கம் விஜய், அதிமுக, பாஜக பக்கம் செல்ல மாட்டார் ஒன்று தவெக தலைமையில் கூட்டணி அமைப்பார். இல்லாவிடிவில் தனித்து போட்டியிடுவார் என்றும் தகவல்கள் உலா வருகின்றன. தேர்தலில் திமுக, அதிமுக இடையே தான் நேரடி போட்டி என விஜய் அடிக்கடி சொல்லி வந்தார். அந்த வகையில் திமுகவை சாய்க்கும் முனைப்புடன் விஜய் உள்ளதாகவும், சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து விஜய் போட்டியிட போவதாகவும் தவெக தொண்டர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உதயநிதி விஜய்யை ஓட விடுவார்
விஜய் கட்சி ஆரம்பிப்பதாக சொன்னவுடன் அவர் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறார். அதுவும் கரூர் சம்பவத்துக்கு பிறகு அனைத்து நியூஸ் சேனல்கள், யூடிப்களிலும் விஜய் குறித்து பேச்சு தான் உள்ளது. இந்நிலையில், அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் உதயநிதி விஜய்யை ஓட விடுவார் என்று பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
விஜய் காலியாகி விடுவார்
இது தொடர்பாக யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டியளித்தபோது பத்திரிகையாளர் ஒருவர் 'விஜய் தனித்து போட்டியிட்டாலும் திமுகவுக்கு கடும் சவால் அளிக்க முடியும். சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து விஜய் போட்டியிட்டால் திமுக வாஷ் அவுட்டாவது உறுதி' என்றார். இந்த கருத்து தொடர்பாக பேசிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன், ''வரும் தேர்தலில் விஜய் தனித்து நின்றால் காலியாகி விடுவார். தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து விட்டால் உதயநிதி தான் முதல்வராக வருவார்.
உதயநிதி விஜய்யை எப்படி டீல் செய்வார்?
உதயநிதி விஜய்யை எப்படி டீல் செய்வார்? விஜய் விஷயத்தில் முதல்வர் ஸ்டாலினாவது ரொம்ப கண்ணியமாக நடந்து கொள்கிறார். ஆனால் உதயநிதி அப்படி அல்ல. அவர் இளரத்தம் என்பதால் விஜய்யை டீல் செய்வது வேறு மாதிரி இருக்கும். கரூர் சம்பவத்தில் தமிழக போலீஸ் விஜய்க்கு எதிராகவும், சிபிஐ விஜய்யிடம் அன்பாக விசாரிக்கும் என்பதெல்லாம் கிடையாது.
டெல்லியில் தவெக குடுமி
எல்லா போலீசும் ஒன்று தான். எந்த போலீசும் அவங்களுக்கு பிடிச்சது கிடைக்கவில்லை என்றால் தோரணை வேறு மாதிரி இருக்கும். இங்க தப்பித்து அங்கே மாட்டிக் கொண்டீர்கள். இனி அவ்வளவு தான். தமிழகத்தில் குடுமி இருப்பதற்கு பதிலாக டெல்லியில் உங்கள் குடுமி மாட்டியுள்ளது. இந்த குடுமி வேண்டுமா? அல்லது வேண்டாமா? என்பதை விஜய் தான் முடிவு செய்ய வேண்டும்.
அதிமுக-தவெக கூட்டணி
இது மிஸ்ஸாகி மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விட்டால் விஜய்க்கு பெரிய ஸ்கெட்ச் இருக்கிறது. ஏனெனில் விஜய்யை விட்டு வைத்தால் அது உதயநிதிக்கு ஆபத்து. ஆகையால் திமுக சும்மா இருக்காது. விஜய்க்கு எதிரான நடவடிக்கையில் இறங்கும். அதிமுகவை பொறுத்தவரை விஜய் கைகொடுத்தால் லாபம். இல்லாவிட்டாலும் அதிமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் பாதிப்பு விஜய்க்கு தான்.
திமுகவும், அதிமுகவும் சேர்ந்து அடிக்கும்
ஏனெனில் 8% வாக்குகளை மட்டுமே வைத்துக் கொண்டு தவெகவே பிகு பண்ணும்போது, எதிர்க்கட்சியாக இருக்கும், ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக சும்மா இருக்குமா? ஓரளவுக்கு தான் அதிமுக பொறுமை காக்கும். விஜய் கூட்டணிக்கு ஒத்துவரவில்லை என்றால் கிளம்பி விடும். விஜய் கூட்டணிக்கு வரவில்லை அதிமுகவும் பூத்தில் சேர்ந்து விஜய்யை அடிக்கும். அதிமுகவும், திமுகவும் சேர்ந்து அடித்தால் தவெக வேட்பாளர்களுக்கு வரக்கூடிய ஓட்டு கூட வராது'' என்று தெரிவித்தார்.
