அவதூறுகளைப் பரப்புவதும், கேவலமாகப் பேசுவதும் தான் அரசியல் என ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட அரசியல் நமக்கு தேவையில்லை என விஜய் காட்டமாக தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய் ஆளும் கட்சியை கடுமையாக சாடினார். குறிப்பாக மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை ஆட்சியாளர்களே இழிவாகப் பேசுவதைக் கடுமையாகக் கண்டித்தார். அவர் பேசுகையில், “மக்களுக்கு அரசு வழங்குவது எதுவும் இலவசம் கிடையாது. அனைத்தும் அவர்களுக்கான சலுகைகள். மக்களின் வரிப்பணத்தில் தான் அவர்களுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அப்படிப்பட்ட திட்டங்களை வழங்கிவிட்டு ஓசி ஓசி என ஆட்சியாளர்கள் இழிவுபடுத்துகின்றனர். நான் சலுகைகளுக்கு எதிரானவன் கிடையாது. நான் பேசுவது அனைத்தும் சினிமா வசனம், சினிமாவில் வருவது போல் பேசுகிறேன் என ஆட்சியாளர்கள் விமர்சிக்கின்றனர். அவதூறுகளைப் பரப்புவதும், கேவலமாகப் பேசுவதும் தான் அவர்களது அரசியல். அப்படிப்பட்ட அரசியலை அவர்களை விட எனக்கு நன்கு தெரியும். ஆனால் அது தேவையில்லை” என்று உரக்கப் பேசினார்.