தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு விஜய் குரல் கொடுக்கவில்லை என்று பலரும் குற்றச்சாட்டுகளை வெளியிட்டு வரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் வகையில் விஜய் குட்டி கதையை சொல்லி மாநாட்டை தொடங்கி உள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. விஜய் மாநாட்டில் என்ன பேசப்போகிறார் என்று எதிர்நோக்கி லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது தொண்டர்களின் கோஷம் விண்ணை அதிரவிட்ட நிலையில் விஜய்யின் உரை தொடங்கியது.

தொடக்கத்திலேயே மாஸ் காட்டிய விஜய் குட்டி கதையுடன் தனது உரையைத் தொடங்கினார். அப்போது, “காட்டில் வாழக்கூடிய சிங்கம் அடிக்கடி குகையை விட்டு வெளியேறாது. வேட்டையாடுவதற்காக மட்டும் தான் வெளியே வரும். அப்படியே வெளியே வந்தாலும் உயிரிழந்த விலங்குகளை தொட்டு கூட பார்க்காது. தன்னை விட பலம் வாய்ந்த, அளவில் பெரிய அளவில் உள்ள விலங்குகளை தான் வேட்டையாடும்” என்று கூறி தனது உரையைத் தொடங்கினார்.

Scroll to load tweet…

தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட பிரச்சினைகளுக்க மட்டுமே விஜய் குரல் கொடுக்கிறார், பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்று கூறிவரும் நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாகவே இந்த குட்டி கதையை பேசியதாக சொல்லப்படுகிறது.