நடிகர் விஜய்-க்கு எது பிளஸ்சாக அமைந்துள்ளதோ அதுவே அவருக்கு மைனசாகவும் அமைந்துள்ளது என்று நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

நடிகை கஸ்தூரி, சமூக வலைத்தளமான டுவிட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். சினிமா, அரசியல், சமூக என அனைத்து விஷயங்கள் பற்றியும் அவ்வப்போது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் சர்ச்சையில் சிக்கியதும் உண்டு. 

சில விஷயங்களில் அவர் சொல்லும் கருத்துக்கு பாராட்டும், எதிர்ப்பும் எழுவதுண்டு. இந்த நிலையில், நடிகர்கள் அஜித், விஜய் ஆகியோரின் பிளஸ் மற்றும் மைனஸ் பற்றி துணிச்சலான கருத்து தெரிவிக்குமாறு ஒருவர் கஸ்தூரியிடம் டுவிட்டரில் கேட்டிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்ற கஸ்தூரியும் நடிகர்கள் விஜய், அஜித் பற்றி பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், விஜய்க்கு பிளஸ் ஆக இருப்பவை எவர்கிரீன் லுக், அருமையான டான்சர், திறமையான நடிகர். வெறித்தனம் ரசிகர்கள். மைனசாக இருப்பவை, ஸ்க்ரிப்ட் தேர்வு, வெறித்தனம் ரசிகர்கள் என்று கஸ்தூரி
பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித்துக்கு பிளஸ் அழகு, தானாக வெற்றி அடைந்தார். நேர்மையானவர், நல்லவர், உண்மையான ரசிகர்கள் என்றும் மைனசாக இருப்பவை ஒரே தயாரிப்பாளர், ஒரே இயக்குநர், ஒரே ஸ்கிரிப்ட் என்று பதவிட்டுள்ளார்.