கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விஜய் உருக்கமான வீடியோ வெளியிட்டார். என் வாழ்வில் இதுபோன்ற ஒரு துயரத்தை பார்த்தது இல்லை என்று அவர் கூறினார்.
கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜய், ''என் வாழ்வில் இதுபோன்ற ஒரு துயரத்தை பார்த்தது இல்லை. நடக்க கூடாதது நடந்து விட்டது. கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும்.
விஜய் உருக்கமான பேச்சு
கரூர் மக்கள் உண்மையை சொல்லும்போது கடவுளே வந்து உண்மையை சொல்வது போல் உள்ளது. சி எம் சார் என்னை பழிவாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். என்னை பழிவாங்குங்குகள். மக்களை ஏதும் செய்யாதீர்கள். வேறு அசம்பாவிதம் ஏதும் நடந்து விடக்கூடாது என்று தான் நான் உடனே ஹாஸ்பிடல் போகல'' என்று விஜய் உருக்கமாக பேசினார்.
