Asianet News TamilAsianet News Tamil

டி.என்.பி.எஸ்.சி. மூலம் இளநிலைப் பொறியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் - பொறியாளார்கள் சங்கம்…

via Tnpsc choose undergraduate engineers - Engineers Union
via Tnpsc choose undergraduate engineers - Engineers Union
Author
First Published Jun 27, 2017, 8:16 AM IST


பெரம்பலூர்

பி.இ. பொறியாளர்களுக்கு ஏற்பட்டு வரும் இடர்பாடுகளை களைந்திட, டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய தேர்வு மூலம் இளநிலைப் பொறியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். என்று உதவி பொறியாளார்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூரில், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளார்கள் சங்கத்தின் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், “தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையில் உதவி கோட்டப் பொறியாளார்கள் பதவி உயர்வுக்கு பி.இ. பட்டம் பெற்ற உதவி பொறியாளார்கள், டிப்ளமோ தகுதிப் பெற்ற இளநிலைப் பொறியாளார்கள் 3-க்கு 1 என்ற விகிதத்தில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பொதுப்பணித்துறை உள்ளிட்ட பிறத் துறைகளில் பி.இ படித்த உதவி பொறியாளார்கள் ஐந்து ஆண்டுகளும், டிப்ளமோ தகுதிப் பெற்ற இளநிலை பொறியாளார்கள் 10 ஆண்டுகளும் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

ஆனால், நெடுஞ்சாலைத் துறையில் பழைய விதிமுறைகளைப் பயன்படுத்தி இளநிலைப் பொறியாளார்களாக மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தாலே உதவி கோட்டப் பொறியாளார்களாக பதவி உயர்வு பெறலாம் என்றிருப்பதால், உதவிப் பொறியாளர்கள், உதவி கோட்டப் பொறியாளார்களாக பதவி உயர்வு பெறுவதில் காலதாமதம் எற்பட்டு வருகிறது.

எனவே, பிறதுறைகளில் உள்ள விதிமுறைகளை நெடுஞ்சாலைத் துறையிலும் பின்பற்றும் வகையில் தமிழக அரசு விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்.

கூடுதல் கல்வித்தகுதி பெற்ற உதவி பொறியாளர்கள் நீண்ட கால பணி அனுபவம் பெற்றிருந்தும், பதவி உயர்வு பெறமுடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, 2008-ஆம் ஆண்டு முதல் பணி விதிகளை திருத்த வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகிறோம்.

இந்தக் கூட்டத்தில் பி.இ. பொறியாளர்களுக்கு ஏற்பட்டு வரும் இடர்பாடுகளை களைந்திட, டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணைய தேர்வு மூலம் இளநிலைப் பொறியாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

நெடுஞ்சாலைத் துறையில் கீழ்நிலைப் பதவிகளில் இருந்து, இளநிலைப் பொறியாளர்களாக நியமனம் பெறுபவர்கள் உதவிக் கோட்டப் பொறியாளர் பதவி உயர்வுக்கு, பி.இ. பட்டதாரிகளை முந்திச் செல்லாதவாறு விதிகளில் திருத்தம் செய்ய, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் ஜெயந்தி நளினா, கண்ணன், கலைராஜா, கோமதி, ராஜா, அகிலா, நபார்டு கிராம சாலைகள் பிரிவை சேர்ந்த ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios