இராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் இருக்கும் வேதியியல் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் போராடி வருகின்றன.

வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் உள்ள சிப்காட்டில் இருக்கும் வேதியியல் தொழிற்சாலையில் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருப்பதை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்புப் படை வீரர்கள், கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐந்து தீயணைப்பு வாகனங்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தொழிற்சாலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பற்றியும், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் இன்னும் எந்த விவரமும் தெரியவில்லை.
தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் தீயால் அந்த பகுதியே புகை மூட்டமாய் காட்சியளிக்கிறது.
இந்த தீ விபத்தில் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதனையடுத்து காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
