Asianet News TamilAsianet News Tamil

#Breaking:ஆய்வு செய்யும் போதே அதிர்வு.. வீடுகளில் விரிசல்.. வருவாய் துறை தகவல்

ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

vellore Earthquake update
Author
Vellore, First Published Dec 25, 2021, 7:31 PM IST

நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். நில அதிர்வால் பாதிக்கபட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தாக கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 29 ஆம் தேதி அதிகாலை 04.17 மணிக்கு திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 03.06 ஆக பதிவானதாகவும் வேலூருக்கு தெற்கு மற்றும் தென் மேற்கில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் வாணியம்பாடி அருகே ராமநாயக்கன்பேட்டை, தும்பேரி கிராமத்தினர் இந்த அதிர்வை உணர்ந்ததாக சொல்லப்பட்டது. எனினும் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என வருவாய் துறையினர் தெரிவித்தனர். இருப்பினும் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தட்டபாறை கிராமத்தில் செல்வம் என்பவரின் வீட்டில் விரிசல் விழுந்ததாக கூறப்பட்டது.

vellore Earthquake update

இதேபோல் கடந்த 23 ஆம் தேதி, பிற்பகல் 03.14 மணிக்கு மீண்டும் நில அதிர்வு ஏற்பட்ட நிலையில் இது ரிக்டர் அளவுகோலில் 03.05 ஆக பதிவானது. ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே பூமியிலிருந்து 10 கி.மீ. ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே டிடி மோட்டூர், தரைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக அப்பகுதிமக்கள் கூறினர். வீட்டிலிருந்த பொருட்கள் கிழே விழுந்து சேதமாகியதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பேரணாம்பட்டு பகுதியில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 09.30 மணியளவில், ஐந்து நிமிட இடைவெளியில் இரண்டு முறை சுமார் 3 விநாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

மேலும் பேரணாம்பட்டில் மீண்டும் மதியம் இருமுறை நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். ஏற்கனவே 3-வது முறையாக இன்று காலையில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மதியமும் 2 முறை நிலஅதிர்வு ஏற்பட்டது மக்களிடையே பீதியை கிளப்பியது. இந்நிலையில் நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். நில அதிர்வால் பாதிக்கபட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் எனவும் அவர் கூறியதாக சொல்லப்படுகிறதுvellore Earthquake update

வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் ஒரு தனியார் பல்கலைக்கழக புவியியல் ஆராய்ச்சி பேராசிரியர் உள்ளிட்டோர் தரைக்காடு பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றனர். அவர்கள் ஆய்வு மேற்கொண்டிருந்தபோதே நில அதிர்வை உணர முடிந்தது. இதனால் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios