vellamandi natarajan announce about world tour festival

திருச்சியில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அறிவித்துள்ளார்.

கல்வெட்டுக்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் கட்டடங்கள் கட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். சுற்றுலா அலுவலகங்களுக்கு மடிக்கணினி, பிரிண்டர் வாங்க ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். பள்ளி மாணவர்களுக்கு பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா குறித்த பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

கல்வெட்டுக்களைப் பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் புதிய கட்டடங்கள் கட்டப்படும் என்றார். மேலும் வேலூர் கோடடையில் உள்ள அருங்காட்சியகம் விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சென்னை அருங்காட்சியகம் மற்றும் பிற அருங்காட்சியகத்திற்கும் இடையே கணினி இணைப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நலிவுற்ற கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், மாவட்ட அரசு இசை பள்ளிகளில் ஒளி, ஒலி நூலகங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரியில் சுற்றுச்சுவர் எழுப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கவின்கலை மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் நலிவுற்ற கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.