அலங்காநல்லூரில், சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனே நீக்க வலியுறுத்தியும், அலங்காநல்லூரில் வெள்ளிக்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

இங்குள்ள சல்லிக்கட்டு வாடிவாசல் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்டச் செயலர் செல்வ அரசு தலைமை தாங்கினார்.

சோழவந்தான் தொகுதிச் செயலர் சிந்தனை வளவன், ஒன்றியச் செயலர்கள் செம்மணி, கிள்ளிவளவன், மாவட்ட அமைப்பாளர் அதிவீரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, “சல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும் என்றும் இந்தாண்டு நிச்சயம் சல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மாணவரணி அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகரச் செயலர் இலட்சுமணன் நிறைவுரையாகப் பேசினார்.