மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், பிரதமர் நரேந்திரமோடி உருவபொம்மை எரித்தும் சென்னை, வேளச்சேரியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாணவி அனிதா, மருத்துவ படிப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார். இதனால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

நேற்று அனிதாவின் உடல் சிதையூட்டப்பட்டன. இந்த நிலையில், சென்னையின் பல்வேறு இடங்களில் அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தை மே 17 இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதேபோல், வேளச்சேரியில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

மாணவி அனிதா தற்கொலைக்கு நீதி கேட்டும், பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மை எரித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.