v
பழங்காலத்தில் நம் முன்னோர்கள் மேற்கொண்டு வந்த அனைத்து பழக்க வழக்கங்களும் மீண்டும் உயிர்பெற்று உள்ளது

என்னதான் ஆடம்பர வாழ்க்கைக்கு மாறினாலும், மீண்டும் ஆரம்பத்திற்கு வர வேண்டும்.
உதாரணம் :
டெங்குவிற்கு கொடுக்கப்படும் நிலவேம்பு கசாயம்
நம் மூதாதையர் முதல் அனைவருமே பயன்படுத்தி வந்த கயிறு கட்டல் தற்போது ஆன்லைனில், அதுவும் ஆஸ்திரேலிய இளைஞர் விற்பனை செய்து வருகிறார் – பிசினஸ் அமோகமாக உள்ளதாம்
அடுத்து, பழைய சோறு , MORNING RICE என்ற பெயரில் ஒரு பாட்டிலில் அடைத்து, தற்போது சூப்பர் மார்கெட்டில் வைத்து விற்கும் அளவிற்கு வந்துள்ளது.
பின்னர், மாட்டு சாணம்.... நம் மக்கள் மாட்டு சாணத்தை இன்றைக்கும் கிருமி நாசினியாக பயன்படுத்தி வருகின்றனர். இன்றளவும் பல கிராமங்களில் சாணி கரைசலை வாசலில் போட்டு, கோலமிட்டு விழாக்களை கொண்டாடுவது வழக்கம்.....
தற்போது இதனையும் அமேசான் நிறுவனம் ஆன்லைனில் விற்று வருகிறது. தீபாவளிக்கு இரண்டே நாட்கள் இருக்கும் தருவாயில்,இனி வரும் விழாக்காலங்களிலும் பயன்படும் வகையில்சாணத்தில் தயார் செய்யப்படும் மாட்டு “வறட்டி” ...தற்போது ஆன்லைனில் அமோக விற்பனை ஆகி வருகிறதாம்
ஆதுவும் 9 பீஸ் ரூ.199 .....!
