Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாட்டில் இந்த ரயில் நிலையம் நாளை முதல் இயங்காது.. ரயில்வே தகவல்.. என்ன காரணம் தெரியுமா?

கரூர் – சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் தான் நாளை முதல் (ஜனவரி 26) மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Vangal Railway station in Tamilnadu to be closed from jan 26 2024 know why Rya
Author
First Published Jan 25, 2024, 2:30 PM IST

ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய நெட்வொர்காக இந்திய ரயில்வே உள்ளது. வசதியான, பாதுகாப்பான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

மேலும் புதிய ரயில்களும், ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரம் போதிய வரவேற்பு இல்லாத ரயில் நிலையங்கள் மூடப்பட்டு வருகின்றன. 

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் அதிரடி மாற்றம்.. ஐஆர்சிடிசி புதிய உத்தரவு.. பயணிகளே உஷார்..

அந்த வகையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு ரயில் நிலையத்தை மூட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. பயணிகளிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் இந்த ரயில் நிலையம் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் – சேலம் வழித்தடத்தில் உள்ள வாங்கல் ரயில் நிலையம் தான் நாளை முதல் (ஜனவரி 26) மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி இன்று வரை மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்றும், நாளை முதல் எந்த ரயில்களும் இந்த ரயில் நிலையத்தில் நிற்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ரயில் நிலையத்தில் நாளை முதல் பயணச்சீட்டு வழங்கப்படாது என்று தெரிவித்துள்ள ரயில்வே வேறு எங்கிருந்தும் இந்த ரயில் நிலையத்திற்கான பயணச்சீட்டு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோகனூர் – கரூர் வழித்தடத்தில் உள்ள இந்த வாங்கல் ரயில் நிலையத்திற்கு பயணிகளிடம் போதிய வரவேற்பு கிடைக்காத காரணத்தால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில் பயணிகளே கவனம்.. இதையெல்லாம் மீறினால் 1000 ரூபாய் அபராதம்.. என்னென்ன விதிகள் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios