மதுரையில் மதிமுக தொண்டர் தீக்குளிப்பு

மதுரையில் நியூட்ரினோ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து,வைகோ  நடைபயணம் மேற்கொள்ள இருந்த இடத்தில் தொண்டர ஒருவர்  தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று காலை, திமுக செயல் ஸ்டாலின் மற்றும் மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ கலந்துக்கொண்டு, நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக நடைப்பயணம் தொடங்க இருந்த நிலையில் தொண்டர் ரவி  தீக்குளித்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது

தீக்குளித்த மதிமுக தொண்டர் பலத்த காயம் அடைந்துள்ளதால் அவரை  உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  உள்ளனர்

விருதுநகர் மாவட்ட மதிமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி தீக்குளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தன் கட்சித்தொண்டர் தீக்குளித்த சம்பவத்தால்,மேடையிலேயே கண்ணீர் சிந்தியுள்ளார் வைகோ.

தீக்குளித்த ரவி உடல் மிகுந்த காயம் அடைந்துள்ளதால்,அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயற்கை அன்னை எப்படியாவது தொண்டரை காப்பாற்ற வேண்டும் என  மேடையிலேயே கண்ணீர் மல்க பேசி உள்ளார் வைகோ.