கடந்த 2016 ஆம் வருடம், திமுக தலைவர் கருணாநிதி சுவாச கோளாறு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்

அப்போது திமுக தலைவர் உடல் நலம் குறித்து விசாரிக்க, வைகோ மருத்துவமனைக்கு வந்தார். இதனால்  மருத்துவமனை முன்பு கூடியிருந்த, திமுக தொண்டர்கள் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். மேலும் அவருடைய காரை மறித்து திரும்பிச் செல்லுமாறு தகராறு செய்தனர்.

பின்னர் அங்கிருந்த திமுக தொண்டர் களைப் பார்த்து, நான் திரும்பிச் செல்கிறேன் என்று சைகை மூலம் காட்டிவிட்டு, கருணாநிதியை சந்திக்காமலே காரில் ஏறி சென்றுவிட்டார். அதன்பிறகு, திமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர். இதனால் மருத்துவமனை முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது, திமுக தலைவரை பார்க்க வந்த வைக்கோவுக்கு திமுக தொண்டர்கள் உரிய மரியாதை கொடுத்தனர். மேலும் மருத்துவமனை உள்ளே சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார் வைகோ. இதனை மிகவும் உருக்கமாக செய்தியாளர்களை சந்தித்தபோது போன முறை எதிர்ப்பு, இந்த முறை வரவேற்ப்பு என உருக்கமாக கூறியுள்ளார் வைகோ.