கோலிவுட் வட்டாரத்தில் இப்போதைய ஹாட் டாப்பிக் வடசென்னை திரைப்படம் தான். வெள்ளித்திரையில் நேற்று ரிலீசாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்டமான வரவேற்பினை பெற்றிருக்கிறது. 

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரகனி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த திரைப்படம், வடசென்னையின் 30 ஆண்டுகால வரலாற்றை, அடி தடி ரணகள சம்பவங்களுடனும் அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் காரணங்களுடனும் விளக்கி இருக்கிறது. 
மூன்று பாகங்களாக இந்த படத்தை எடுத்திட திட்டமிட்டிருந்த வெற்றிமாறனுக்கு, வடசென்னைக்கு கிடைத்திருக்கும் இந்த அமோகமான வரவேற்பு மற்றும் நேர்மறை விமர்சனங்கள் நிஜமாகவே உற்சாகமளிப்பதாக அமைந்திருக்கிறது. 

இப்போதே அடுத்த பாகத்தை ரிலீஸ் செய்தாலும் படத்தை நாங்கள் வெற்றிப்படமாக்குகிறோம் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தை பார்த்த பிரபலங்களும் கூட இதே கருத்தை தான் முன்வைத்திருக்கின்றனர்.  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்திருக்கும் காமெடி நடிகை ஹார்தியும், வடசென்னை பார்த்துவிட்டு தன்னுடைய கருத்தை டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

எக்கச்சக்கமான கூட்டத்திற்கு இடையே இந்த படத்தை பார்த்ததாக தெரிவித்திருக்கும் ஹாரதி “வடசென்னை மரண மாஸ்…”
“தில்லாகவும் , ராவாகவும் ,நேர்மையாகவும், எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் தெளிவான தகவல்களுடன் வந்திருக்கிறது வடசென்னை படம். கண்டிப்பாக எல்லாரும் பார்க்க வேண்டிய படம். மரண மாஸ்… வித்தியாசமான படம், இடைவெளி காட்சிகள் புல்லரிக்க வைக்குது.. ”என எக்கச்சக்கமாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார் ஹாரதி.