Usually the electric train works like!

தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. 

கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமாழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். மழை காரணமாக மின்சார ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தண்டவாளங்களில் உள்ள நீரை அகற்றுவதற்காக மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் ரயில்வே துறை கூறியுள்ளது.

சென்னையில் பெய்யும் மழை காரணமாக மின்சார ரயிலின் சேவையில் பாதிப்பு இருக்காது என்றும் வழக்கம்போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

சென்னையில் நேற்று பெய்த கனமழை காரணமாக மாலையில் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் இன்னலுக்கு ஆளானார்கள்.