இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில், விளையாடிக் கொண்டிருந்த மகன் மீது அவசர அவசரமாக தந்தை எடுத்த ஆட்டோ ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே மகன் பரிதாபமாக உயிரிழந்தார். கண்முன்னே மகன் இறந்ததைப் பார்த்து தாயும், தந்தையும் கதறி அழுதனர்.

ramanathapuram district க்கான பட முடிவு

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவில் உள்ளது கொண்டுலாவி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (25). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு வயதில் மகன் ஒருவர் உள்ளார்.

முருகன் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். தினமும் ஆட்டோ ஓட்டிவந்த பிறகு வீட்டின் முன்பு நிறுத்தி வைப்பது வழக்கம். தினமும் மகனை தூக்கிவைத்து கொஞ்சிப் பிறகுதான் ஆட்டோவைச் சுத்தம் செய்யவே ஆரம்பிப்பார். பின்னர் சவாரிக்கு செல்வார். 

நேற்று முன்தினம் காலை மகனைத் தூக்கிவைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த முருகன் சவாரிக்கு நேரமானதால் மகனை கீழே இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மகன் வருண்சுபாஷ் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தார்.

ஆட்டோவைச் சுத்தம் செய்தபிறகு மகன் விளையாடிக் கொண்டிருந்ததை கவனிக்காத முருகன், சவாரிக்கு நேரமாகிவிட்டதே என்று அவசர அவசரமாக ஆட்டோவை எடுத்துள்ளார். இதில், மகன் வருண்சுபாஷ் மீது ஆட்டோவின் சக்கரம் சர்ரென்று ஏறியிறங்கியது.

dead க்கான பட முடிவு

இதில் வருண்சுபாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கண்முன்னே விளையாடிக் கொண்டிருந்த மகனை இழந்துவிட்டோமே என்று தாயும், தந்தையும் கதறி அழுதனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரையூர் காவலாளர்கள் வருண்சுபாஷின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்து காவலாளர்கள் வழக்கு பதிந்தனர். 

கண்முன்னே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது தந்தையின் ஆட்டோ ஏறி இறங்கியதில் உயிரழந்த சம்பவம் இந்தப் பகுதியில் பரவி பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.