Asianet News TamilAsianet News Tamil

இனி ரேஷன் கடையில் பணம் கொடுத்து பொருட்கள் வாங்க வேண்டிய அவசியம் இல்லை... புதிய நடைமுறை அமல்- என்ன தெரியுமா.?

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க பணம் கொடுத்து வாங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பணம் இல்லா பண பரிவர்த்தனை வாயிலாக ஜி பே , பேடிஎம் மூலம் இனி பணம் செலுத்து வாங்கிக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

UPI facility has been introduced in Tamil Nadu ration shops KAK
Author
First Published Oct 13, 2023, 11:04 AM IST

நவீன காலத்திற்கு ஏற்ப தொழில்நுட்ப வளர்ச்சியும் வேகாமக மாறியும், வளர்ந்தும் வருகிறது. அந்த வகையில் பணம் இல்லாத பணபரிவர்த்தனையை நாடு முழுவதும் வேகமாக வளர்ந்து வருகிறது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்று தற்போது ஜி பே, பேடிஎம் போன்றவை மக்களிடம் பழக்கமாகிவிட்ட ஒன்றாக மாறி விட்டது.

அந்த வகையில் பெரிய ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் மட்டுமே இருந்த யுபிஐ வசதி சாதாரண பெட்டிக்கடைகளிலும் வந்து விட்டது. 10 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கினாலும் ஜி பே மூலம் பணம் கொடுக்கும் பழக்கம் அதிகமாக வருகிறது. தனியார் கடைகளில் செயல்படுத்தப்படும் இந்த பணம் பரிவர்த்தனை தற்போது அரசு சேவைகளிலும் தொடங்கப்பட்டுள்ளது. 

UPI facility has been introduced in Tamil Nadu ration shops KAK

உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்படும் ரேஷன் கடைகளிலும் இனி யுபிஐ வசதி தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,  சென்னை மற்றும் அம்பத்தூர், ஆவடி புறநகர் பகுதிகளில் உள்ள 588 நியாய விலைக் கடைகளில் 562 கடைகளில் UPI மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்வது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மீதமுள்ள 26 கடைகளில் விரைவில் நடைமுறை படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர் முழுவதும் மொத்தமாக 1700 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் 1500 க்கும் மேற்பட்ட கடைகளில் இத்திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு உள்ளது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

அடங்காத ரவுடி பேபி சூர்யா, சிக்கா- மீண்டும் அதிரடியாக கைது செய்த போலீஸ்- என்ன காரணம் தெரியுமா.?
 

Follow Us:
Download App:
  • android
  • ios