சென்னை பெரம்பூர் பிபி சாலையை ஒட்டி வியாசர்பாடி ஜீவா – பெரம்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தின் ஓரத்தில் முட்புதர்கள் உள்ளன. இங்கு நேற்று மாலை கடும் துர்நாற்றம் வீசியது. அவ்வழியாக சென்ற பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மூக்கை பிடித்தபடி சென்றனர்.

தகவலறிந்து பெரம்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை செய்தபோது, அங்குள்ள முட்புதரில் சுமார் 40 வயது ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. பேன்ட் மட்டும் அணிந்து இருந்தார். சட்டை கிழிந்து இருந்தது.

இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்தவர் யார், எப்படி இங்கு சடலமாக கிடந்தார். யாராவது கொலை செய்து வீசி சென்றார்களா அல்லது வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.