Asianet News TamilAsianet News Tamil

மிக்ஜாம் புயல்: முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா!

மிக்ஜாம் புயல் பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலினை தொடர்பு கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்துள்ளார்

Union home minister amit shah telephoned CM mk stalin and take stock on Cyclone Michaung  smp
Author
First Published Dec 4, 2023, 4:41 PM IST

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக  உருவாகியுள்ள மிக்ஜாம் புயலினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்புப் பணிகள் குறித்தும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.

அப்போது, முதல்வர் ஸ்டாலின், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு  உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகள் குறித்தும், எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக அவரிடம் எடுத்துரைத்தார்.

ராஜஸ்தானின் அடுத்த பாஜக முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் 7 பேர்!

தேசிய பேரிடர் மீட்புக் குழு மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து  துரிதமாக மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும்,  கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்திடுமாறும் அமித் ஷாவிடம் அப்போது முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

உடனடி நிவாரணப் பணிகளை மேற்கொண்ட பிறகு பாதிப்புகள் குறித்து உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டு தேவைப்படும் உதவிகள் ஒன்றிய அரசிடம் கேட்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று, தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் உறுதியளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios