காஞ்சிபுரம்
Add Asianetnews Tamil as a Preferred Source

செங்கல்பட்டு - மகேந்திராசிட்டி அருகே பல்லாவரத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் லாசர், யுவராஜ் ஆகிய இருவரும் பணிபுரிந்து வந்தனர்.
இவர்கள் இருவரும் அச்சரபாக்கம் மாதா கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, இவர்கள் மீது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் பலமாக மோதியது.
இந்த விபத்தில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்துக் குறித்து காவலாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
