Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோயிலுக்கு ‘யுனெஸ்கோ விருது’....

UNESCO award to srirengam temple
UNESCO award to srirengam temple
Author
First Published Nov 2, 2017, 9:31 AM IST

 கலாச்சார பாரம்பரியத்தை போற்றிப்பாதுகாத்தமைக்காக திருச்சி, ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில், ‘யுனெஸ்கோ’வின் ‘அவார்ட் ஆப் மெரிட்’ விருதைப் பெற்றுள்ளது.

சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்ற நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோயில் எந்தவிதமான பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 2015ம் ஆண்டு புதுப்பித்தல் மற்றும் அழகுபடுத்தும் பணிக்காக ரூ.20 கோடி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகிகள் கூறுகையில், “  ஸ்ரீ ரங்கநாதர் கோயில் யுனெஸ்கோவின் விருதுக்கு தேர்வாகி இருப்பதாக, நேற்றுமுன்தினம் கடிதம் கிடைக்கப் பெற்றோம். தமிழகத்தில் யுனெஸ்கோவிருது பெறும் முதல் கோயில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி கோயில் என்பது குறிப்பிடத்தக்கது’’ என்றனர்.

UNESCO award to srirengam temple

ஆசிய-பிசிபிக் பகுதியில் கலாச்சார பாரம்பரியத்தை காக்கும் விருதுக்காக 10 நாடுகளில் இருந்து 43 விண்ணப்பங்கள் யுனெஸ்கோவுக்கு அனுப்பப்பட்டன.

இதில் தென் இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு விருதைப்பெற்ற முதல் கோயில் ஸ்ரீ ரங்கநாதர்சுவாமி கோயிலாகும். மேலும், மும்பையில் உள்ள கிறிஸ்ட் சர்ச், ராயல் பாம்பே ஒபேரா ஹவுஸ் ஆகிய இடங்களும் இந்த ஆண்டு விருதைப் பெறுகின்றன.

UNESCO award to srirengam temple

இந்த விருதுகள் அனைத்தும் சிறப்பான செயல்பாடு, தனிச்சிறப்பு, தகுதி, பாரம்பரியத்தில் புதிய வடிவங்கள் ஆகிய 4 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பாரம்பரியம் கொண்ட, கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த வழிபாட்டு தலங்களை மக்கள் பாதுகாக்கும் விதத்தில் ஊக்கப்படுத்த இந்த விருது தரப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios