Unauthorized seizure of lorry vehicles in the lake without permission

தருமபுரி

தருமபுரியில் அனுமதியின்றி ஏரியில் மண் எடுத்த ஜேசிபி, டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை காவலாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம், வெதரம்பட்டி ஏரியில் அரசு அனுமதியின்றி மண் எடுப்பதாக காவலாளர்களுக்கு அடுக்கடுக்காக புகார்கள் வந்தன.

இதனை விசாரிக்க, கம்பைநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான காவலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இளையராஜா தலைமையில் காவலாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கம்பைநல்லூரில் உள்ள ஏரியில் மணல் அள்ளிக் கொண்டிருந்த வாகனங்களை சோதனை செய்தனர்.

அதன்படி அனுமதியின்றி ஏரியில் மண் எடுத்த ஒரு ஜேசிபி, இரண்டு டிராக்டர்களை காவலாளர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூ.11 இலட்சம்.

பின்னர், அனுமதியின்றி மணல் அள்ளிய வாகங்களின் உரிமையாளர்கள் விவரம் குறித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.