Umagine TN 2025 : ட்ரில்லியன் டாலரை நோக்கி செல்லும் தமிழகம்.. முதல்வர் மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றும் இலக்கை நோக்கி Umagine TN 2025 வர்த்தக மாநாடு சென்னையில் ஜனவரி 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
டிரில்லியன் டாலர் இலக்கு
மற்ற மாநிலங்களை விட தமிழகத்தை பொருளாதாரத்தில் முதன்மை மாநிலமாக மாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி, தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டார்.
முதலமைச்சர் வெளிநாட்டு பயணம்
மேலும் திமுல ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும் இவற்றின் மொத்த மதிப்பு ரூ.9.99 லட்சம் கோடி. இதன்மூலம், 18.89 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் Umagine TN 2024 வர்த்தக மாநாடு சென்னையில் வெற்றிகரமாக கடந்த ஆண்டு நடைபெற்று முடிவடைந்த நிலையல் மீண்டும் Umagine TN 2025 வர்த்தக மாநாடு நடைபெறவுள்ளது. தமிழக அரசு சார்பில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதிகளில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான பதிவானது தற்போது தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மொத்தம் 20 மணி நேரம் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதில் குறிப்பாக 18க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம் பெற உள்ளதாகும். 100க்கும் மற்ற மேற்பட்ட வர்த்தக நிபுணர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை பகிர்ந்துந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Umagine TN 2025 வர்த்தக மாநாடு
4ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் , 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 50,000 சதுர அடியில் பல்வேறு வர்த்தக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வர்த்தக கண்காட்சியில் சமமான பொதுக் கொள்கைகள் மற்றும் நிர்வாகம், AI தொழில்நுட்பம், காலநிலை தாக்கம் மற்றும் நிலைத்தன்மை, பொருளாதார வளர்ச்சி மற்றும் பணியாளர் மாற்றம், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
மேலும் புதிய தொழில் முனைவர்களுக்கான வாய்ப்பு, புதிய தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் எதிர்காலம், இயற்கை நுன்னறிவு, இயந்திர வழி கற்றல், இணைய பாதுகாப்பு போன்ற பிரிவுகளில் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது. பல்வேறு நாடுகளில் இருந்தும் சிறப்பு வல்லுநர்களும் Umagine TN 2025 வர்த்தக மாநாடில் கலந்து கொள்ளவுள்ளனர்.