Asianet News TamilAsianet News Tamil

உயரம் குறைந்தோருக்கான உலக விளையாட்டுப் போட்டி!தமிழக வீரர்களுக்கு விமான கட்டணத்திற்கான நிதி உதவி செய்த உதயநிதி

உலக உயரம் குறைந்தோருக்கான விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் தமிழக வீரர்களுக்கு, விமான கட்டணம், போக்குவரத்து கட்டணத்திற்கான நிதியை அமைச்சர் உதயநிதி வழங்கினார். 
 

Udhayanithi provides financial assistance to Tamil Nadu sportspersons who are participating in World dwarf games
Author
First Published Jul 10, 2023, 11:35 AM IST

உயரம் குறைந்தோருக்கான விளையாட்டு போட்டி

8-வது உலக உயரம் குறைந்தோருக்கான விளையாட்டு போட்டி ஜெர்மனியின் கெலோனில் அடுத்த மாதம் (ஜூலை) 30-ந்தேதி முதல் ஆகஸ்டு 5-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் பங்கேற்கிறார்கள். அந்த வகையில்  தமிழ்நாட்டை சேர்ந்த செல்வராஜ் அழகப்பன், கணேசன் கருப்பையா, மனோஜ் சிங்கராஜா  ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டியில் கலந்து கொள்ள விமான கட்டணம், போட்டி நுழைவு கட்டணத்திற்கு பணம் இல்லாமல் தவித்தனர். இதனையறிந்த தமிழக அரசு  இவர்கள் 3 பேருக்கும் போட்டிக்கான நுழைவுக்கட்டணம், விமானக்கட்டணம், உள்ளூர் போக்குவரத்து கட்டணம்,

Udhayanithi provides financial assistance to Tamil Nadu sportspersons who are participating in World dwarf games

நிதி உதவி அளித்த உதயநிதி

விசா செலவுகள் மற்றும் சீருடை செலவினம் ஆகியவற்றுக்கான தொகையாக தலா ரூ.2,49,200 என மொத்தம் ரூ.7,47,600-க்கான நிதி உதவியை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது தொடர்பாக உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,  ஜெர்மனில் ஜூலை 28 முதல் தொடங்கவுள்ளது. இந்த சர்வதேச போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ஒடுகம்பட்டியைச் சேர்ந்த தம்பி பாலசுப்பிரமணியம், பாட்மிண்டன் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார். அவருக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.2.49 லட்சத்துக்கான காசோலையை இன்று வழங்கினோம்.

 

வெற்றி பெற வாழ்த்து

தன்னம்பிக்கை துணைகொண்டு பதக்கத்தை வெல்ல தம்பியை வாழ்த்தியாதாக தெரிவித்துள்ளார். மற்றொரு பதிவில்,  ஜெர்மனியில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள #WorldDwarfGames2023-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த சகோதரர்கள் செல்வராஜ் அழகப்பன், கணேசன் கருப்பையா மற்றும் மனோஜ் சிங்கராஜா ஆகியோர் பங்கேற்கின்றனர்.  போட்டியில் பங்கேற்பதற்கான பயணச்செலவு, அனுமதி தொகை போன்றவற்றுக்கு உதவும் விதமாக, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 200 ரூபாய்க்கான காசோலைகளையும் - சீருடைகளையும் இன்று வழங்கியதாக தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

இந்தியா ஜெயிக்க அதிக வாய்ப்பு இருக்கிறது: முகமது கைஃப்!
 

Follow Us:
Download App:
  • android
  • ios