வேலூர் அருகே இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம் தெழுங்குமட்றபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சின்னதம்பி. இவரது மனைவி அல்லியம்மாள்.
சின்னதம்பி தனது மனைவியுடன் இரு சக்கரவாகனத்தில் திருப்பத்தூர் அருகே உள்ள பணந்தோப்பு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வேலூரிலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னதம்பி மற்றும் அல்லியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இறந்வர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
