Two persons deathin car accident near vikkiravandi

விக்கிரவாண்டி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் ஐயப்ப பக்தர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

கல்பாக்கத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் இரண்டு குரூப்பாக பிரிந்து வேனில் சபரி மலைக்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்போது விக்கிர வாண்டி அருகே சித்தனி என்ற இடத்தில் சென்றபோது எதிரே சென்னை நோக்கி வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபக்கம் வந்து வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. 

இதில், ஐயப்ப பக்தர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். 

தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரனையில் உயிரிழந்தவர்கள் வெங்கடேசன், ரத்தினக்குமார் என்பது தெரியவந்துள்ளது.