சேலம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதிய விபத்தில் 2 வயது குழந்தை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் கொளத்தூர் செட்டியூர் கொசவங்கரட்டை  பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது மனைவி திகலகவதி மற்றும் மகள் சர்னிகாவுடன் புதிதாக செல்போன் வாங்க இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்று வீடு திரும்பியுள்ளார்.

அப்போது காரைகளம் என்ற இடத்தில் வரும்போது, எதிரே மரக்கட்டைகளை ஏற்றிவந்த லாரி மணிகண்டன் வந்த வாகனத்தின் மீது வேகமாக மோதியது.

இதில் மணிகண்டனும் அவரது இரண்டு வயது குழந்தையான சர்னிகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் திலகவதி படுகாயமடைந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.

பலத்த காயம் அடைந்த திலகவதி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

மேலும் இது குறித்து கொளத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.