two different videos trending on social media about super star

நடிகர் ரஜினிகாந்த் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கு சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை, சந்திக்க அங்கு சென்றிருந்தார். அப்போது அங்கு சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் அவரிடம் நீங்கள் யார்? என கேள்வி கேட்டிருக்கிறார்.

அதற்கு நான் ரஜினி சென்னையில இருந்து வரேன் என ரஜினி பதில் கூறி இருக்கிறார். அப்போது அந்த பாதிக்கப்பட்ட நபர் நாங்க 100 நாள் போராடும் போது சென்னை என்ன ரொம்ப தூரத்துல இருந்துச்சா? என கேள்வி எழுப்புகிறார். ரஜினி சிரித்தபடி அங்கிருந்து நகருகிறார். இப்படி ஒரு வீடியோ இணையத்தில் இப்போது வைரலாகி இருக்கிறது.

நீங்க யாரு??

நான் ரஜினி....
சென்னைல இருந்து வரேன்......

நாங்க நூறு நாள் போராடும் போது சென்னை ரொம்ப தூரத்துல இருந்துச்சா??

இஇ சரி சரி வரேன்..... # தரமான சம்பவம். pic.twitter.com/cUAdEvqwXs

— க.திருமணி பாண்டியன். (@kthirumani) May 30, 2018

இந்த வீடியோ குறித்து ரஜினி தரப்பில் இருந்து அவரது ரசிகர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர். அது டப்பிங் வீடியோ. உண்மையாக அந்த நபர் அப்படி பேசவில்லை. பின்னால் இருந்து எடுக்கப்பட்ட வீடியோவாக இருப்பதால், யாரோ அதில் டப்பிங் பேசி இருக்கின்றனர். இது திட்டமிட்ட சதி என தெரிவித்திருக்கின்றது ரஜினி தரப்பு.

முதல்வராக வரனும் 😍😍😍😍

-பாதிக்கப்பட்டவர்

@rajinikanthpic.twitter.com/Pgne82iwtK

— கட்டுமரக்காரன்™ (@AthiKaari) May 30, 2018

மக்கள் அனைவரும் ரஜினியை பார்த்த சந்தோஷத்தில், ”நீங்க தான் முதல்வராகனும். உங்க கையில தான் தமிழ்நாடே இருக்குது தலைவானு” சொன்னாங்க இது தான் நடந்துது எனவும் அவர்கள் கூறியிருக்கின்றனர்.அப்படி ஒரு வீடியோவும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.