சேலத்தில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுப்டடிருந்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள ரெட்டியூர் பகுதியில் வசித்து வருபவர் வெள்ளிபட்டறை உரிமையாளர் சீனி. இவர் புதியதாக வீடு கட்டி வருகிறார்.

இந்த வீட்டிற்கான கழிவுநீர் தொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் கட்டப்பட்டு காண்கிரீட் கலவையால் மூடப்பட்டது.

இந்தநிலையில் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து காண்கிரீட் முட்டு அகற்றுவதற்காக கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் இறங்கியுள்ளனர்.

திடீரென்று உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் மூச்சு விட முடியாமல் தவித்துள்ளனர்.

தொட்டிக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் உடனடியாக சென்று பார்த்தபோது, மூன்றுபேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் 3 பேரையும் மீட்டனர்.

இதில், தொட்டிக்குள் இறங்கிய ராஜா மற்றும் மணி ஆகிய 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மயக்க நிலையில் இருந்த சத்தியராஜ் என்ற தொழிலாளரி சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொட்டிக்குள் செல்வதற்கு சிறிய அளவிலான துவாரம் மட்டுமே விடப்பட்டிருந்தது. நீண்டநாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த தொட்டி பிரிக்கப்பட்ட உடனே உள்ளே இறங்கியதாலும், சுவாசிப்பதற்கு போதுமான ஆக்சிஜன் இல்லாததாலும் தொழிலாளரிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. 

இந்த சம்வம் தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.