two bus accident in tanjore 2 people accident 20 people injured

தஞ்சை அருகே அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய கோர விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். 

தஞ்சாவூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று நாகப்பட்டினம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே தனியார் பேருந்து ஒன்று எதிரே வேகமாக தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. 

பல்லவராயபேட்டையில் ஒதுங்கி நின்ற அரசு பேருந்தின் மீது தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வேகமாக மோதி விபத்திற்குள்ளானது. இத்ல் பேருந்து ஓட்டுநர் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சிக்கிய பேருந்துகளை கிரேன் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.