திண்டுக்கல்

கேரள மாநிலத்துக்கு காரில் கஞ்சா கடத்திய இருவரை கைது செய்த காவலாளர்கள், அவர்களிடம் இருந்து 240 கிலோ கஞ்சா பொட்டலங்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்திலிருந்து கேரளத்திற்கு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக திண்டுக்கல் போதை தடுப்புப் பிரிவு காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. 

இதனை அடுத்து, திண்டுக்கல் - வத்தலகுண்டு சாலையில், போதைத் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் கௌசர் நிஷா தலைமையிலான காவலாளர்கள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டுள்ளனர். 

அப்போது, அந்த வழியாக வந்த ஒரு ஜீப்பை வழிமறித்து சோதனையிட்டனர். அப்போது, அதில் 240 கிலோ கஞ்சா இருப்பதை காவலாளர்கள் கண்டறிந்தனர்.

இதனையடுத்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த முருகன் மகன் கோபி (24), நாராயணத்தேவன்பட்டியைச் சேர்ந்த பெரியசாமி மகன் பி.ராஜ்குமார் (23) ஆகிய இருவரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 240 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றிய காவலாளர்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப்பையும் பறிமுதல் செய்தனர்.

 கைது செய்யப்பட்ட இவரும் திண்டுக்கல் 2-வது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.