TVK Leader Vijay Talk About MK Stalin : மதுரையில் நடைபெற்ற தவெகவின் 2ஆவது அரசியல் மாநாட்டில் பேசிய விஜய் தமிழக முதல்வர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்நோக்கி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
TVK Leader Vijay Talk About MK Stalin : தமிழக வெற்றிக் கழகம் என்று அரசியல் கட்சியைத் தொடங்கிய தளபதி விஜய்யின் 2ஆவது அரசியல் மாநாடு மதுரையில் இன்று நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் குவிந்து விஜய்யின் வருகைக்காகவும், அவர் என்ன பேசப் போகிறார் என்பதை அறிந்து கொள்ளவும் இரவு முதலே காத்திருந்தனர். முழுக்க முழுக்க தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியே விஜய்யின் அரசியல் பயணம் இருந்து வரும் சூழலில் திமுக மற்றும் பாஜகவை அரசியல் எதிரியாக கொண்டு தனது அரசியல் மாநாட்டை நடத்தி வருகிறார்.
விஜய்யின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடந்தது. இதைத் தொடர்ந்து தவெகவின் 2ஆவது அரசியல் மாநாடு மதுரையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தான் பாடிய பாடலுடன் மேடையேறிய தளபதி விஜய் தனது அப்பா, அம்மாவின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து ரேம்ப் வாக் செய்து 40 அடி உயரம் கொண்ட கொடியை ஏற்றி வைத்து அரசியல் அரசியல் உரையை தொடங்கினார்.
அதில் பேசிய தவெக தலைவர் விஜய் கூறியிருப்பதாவது: வீரம் விளையும் மதுரை மண்ணை வணங்குகிறேன். இந்த மண்ணில் வாழும் மக்களும் உணர்வுப்பூர்வமாணவர்கள். நான் இந்த மண்ணில் கால் வைத்த போது எனக்கு மனதில் தோன்றியது ஒரே ஒரு விஷயம் அதுவும் உங்களுக்கு தெரியும். நமக்கு ரொம்ப ரொம்ப தெரிந்தது புரட்சிதலைவர் எம்ஜிஆர் தான். ஆனால், அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், அவரை மாதிரியே குணம் கொண்ட என்னுடைய அண்ணன் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடன் பழகுவதற்கு நிறையவே வாய்ப்பு கிடைத்தது. அவரும் இந்த மதுரை மண் தானே அவரை மறக்க முடியுமா? என்று கூறியுள்ளார்.
RSS, மோடி, ஸ்டாலின்; பாரபட்சமே இல்லாமல் சிதைத்துவிட்ட தளபதி
மேலும், எம்ஜிஆர் என்றால் யார் தெரியுமா? அவருடைய மாஸ் என்னவென்று தெரியுமா? எம்ஜிஆர் உயிருடன் இருக்கும் வரையில் அவரது முதல்வர் நாற்காலியைப் பற்றி யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எப்படியாவது அந்த சிஎம் சீட்டை எனக்கு கொடுத்துவிடுங்கள், நான் என்னுடைய நண்பர் வந்த பிறகு திரும்ப அந்த சிஎம் சீட்டை கொடுத்துவிடுகிறேன் என்று தனது எதிரியை கூட கெஞ்ச வைத்தவர் தான் எம்ஜிஆர்.
அவர் ஆரம்பித்த அந்த கட்சியை இப்போது கட்டி காப்பது யார்? இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது என்று உங்களுக்கே தெரியும். அந்த அப்பாவி தொண்டர்களுக்கும் தெரியும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், என்ன வேஷம் போட்டுக்கு பாஜக தமிழ்நாட்டிற்குள் வந்தாலும் அவர்களது வித்தை இன்று வேலைக்கே ஆகாது.
இப்படி பொருந்தா கூட்டணியாக பாஜ கூட்டணி இருப்பதால், இந்த விளம்பர மாடல் கொண்ட திமுக ஆட்சி பாஜக உடன் உள்ளுக்குள் ஒரு உறவு வைத்துக் கொண்டு வெளியில் எதிர்ப்பது மாதிரி ஒரு டிராமா போட்டுக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது போங்க மோடி என்று பலூன் விடுவதும், ஆளும் கட்சியாக இருக்கும் போது வாங்க மோடி என்று கொடை பிடிப்பதும் தான் இப்போது திமுக பண்ணிக் கொண்டிருக்கிறது.

ஆனால், ரைடு என்று வந்துவிட்டால் போதும் இப்போது வரை போகவே போகாத மீட்டிங் என்று டெல்லி சென்று சீக்ரெட் ரூம்ல மீட்டிங் நடந்துறது. அதன் பிறகு அந்த பிரச்சனை அப்படியே காணாமல் போவது என்று எல்லாமே நடக்குது. நல்லா நோட் பண்ணுங்க மக்களே… நல்லா நோட் பண்ணுங்க. ஸ்டாலின் அங்கிள் இட்ஸ் வெரி ராங் அங்கிள் Stalin uncle its very wrong uncle ஒரு தவறு செய்தால் அதனை தெரிந்து செய்தால் அது கபட நாடகம் ஆடுகிற திமுக ஆட்சி ஸ்டாலின் அங்கிளாக இருந்தாலும், அங்கிள் அங்கிள் உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்.
நீங்கள் நடத்தும் இந்த ஆட்சியில் நேர்மை, உண்மை இருக்கிறதா? ஊழல் இல்லாமல் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறதா? பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? பொது மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்கள் மை டியர் அங்கிள், சொல்லுங்கள் அங்கிள்.
டாஸ்மாக்கில் மட்டும் இதுவரையில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் இருப்பதாக கூறப்படுகிறது. உலகத்தில் மிஸ்டர் கிளீன் ரெக்கார்டுஸ் உங்களுக்கும், உங்களுடன் இருப்பவர்களுக்கும் மட்டும் தான் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு ரூ.1000 கொடுத்துவிட்டால் போதுமா அங்களில் அப்படியே மூடி மறைத்துவிடலாம் என்று நினைக்கிறீர்களா? படிக்கிற இடம், வேலைக்கு செல்லும் இடம், வெளியில் செல்லும் இடம் என்று பெண்களும், பெண் பிள்ளைகளும் பாதுகாப்பு இல்லை என்று கதறும் சத்தம் கேட்கவில்லையா? இதில் வேறு உங்களை அனைவரும் அப்பா என்று கூப்பிடுவதாக சொல்றீங்க. What is this Uncle It is very very Wrong Uncle, very very Wrong Uncle. பெண்களுக்கு மட்டுமா பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாத்துறீங்க, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் விவசாயிகள், மீனவர்கள், போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிப்பேன் என்று ஏமாத்துறீங்க Very Very Worst Uncle Very Very Worst எப்படி கேட்டாலும் இவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வராது. ஏனென்றால் இவர்களிடம் எந்தப் பதிலும் இல்லை.
நீங்கள் சொல்லுங்கள், மக்களே திமுக அரசு சொன்னதையெல்லாம் செய்தார்களா? மை டியர் அங்கிள் கேட்குதா? மக்களின் சத்தம் கேட்குதா? இது சாதாரணமான முழக்கம் தான். கூடிய விரைவில் மக்களை சந்திக்க போகிறேன். அவர்களுடன் மனம் விட்டுப் பேசப் போகிறேன். அதன் பிறகு இந்த முழக்கம் இடி முழக்கமாக மாறும். அதுவே தமிழகத்தின் போர் முழக்கமாகவும் மாறும். அந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது என்று திமுக அரசிற்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் எதிராக பேசியுள்ளார்.
