Tuticorin Car Accident 2 persons death

கோயில் திருவிழாவுக்கு சென்ற கணவர் மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அவரது உடலைப் பார்க்க சென்ற மனைவி தனது இரண்டு சகோதரிகளையும் விபத்தில் இழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, புழல் அருகே சூரப்பேட்டை பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் செந்தூர் பாண்டி. இவர் சென்னையில் இருந்து திருச்செந்தூர் அருகே உள்ள பேயன்விளை கிராமத்திற்கு உள்ள கோயிலுக்கு சென்றார். கோயிலில் திருவிழா நடைபெறுவதையொட்டி, செந்தூர் பாண்டி, பேயன்விளைக்கு சென்றார்.

திருவிழாவுக்கு சென்ற செந்தூர் பாண்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதில் அவர் அங்கேயே பரிதாபமாக மரணமடைந்தார். செந்தூர் பாண்டி காலமானது குறித்து, அவருடைய மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த அவரது மனைவி வள்ளி, தனது சகோதரிகள் விஜயலட்சுமி மற்றும் அவரது கணவர், சுதர்சன், அருண், மகள் மகாலட்சுமி, மற்றொரு சகோதரி பிரேமா, செந்தூர் பாண்டியின் மகன் ராஜன் ஆகியோர் பேயன்விளைக்கு காரில் புறப்பட்டனர்.

கார், தூத்துக்குடி சிப்காட் ரயில்வே மேம்பாலம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு வேலியை உடைத்துக் கொண்டு பாலத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் வள்ளியின் சகோதரியும் கோடீசின் மனைவியுமான விஜயலெட்சுமி, மற்றொரு சகோதரி பிரேம ஆகிய இருவரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

கணவர் உயிரிழந்த நிலையில், அவரது உடலை பார்க்க சென்றபோது தனது இரண்டு சகோதரிகளையும் இழந்த வள்ளி கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. மேலும் படுகாயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.