ttv dinakaran should appear before egmore court on oct 26
டிடிவி தினகரன் வரும் அக்டோபர் 26 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் கூறியுள்ளது.
டிடிவி தினகரன் மீது, அமலாக்கத் துறை அன்னிய செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, சென்னை எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கைன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, டிடிவி தினகரன் வரும் அக்டோபர் 26ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, இங்கிலாந்தில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் ரூ.1,04,93,000 அமெரிக்க டாலர் மற்றும் ரூ.44 லட்சம் இங்கிலாந்து பவுண்டுகளை 'டிப்பர் இன்வெஸ்ட்மெண்ட்' என்ற நிறுவனத்தின் பெயரில் சட்டவிரோதமாக முதலீடு செய்தது தொடர்பாக கடந்த 1996ஆம் ஆண்டு டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கப் பிரிவு, அந்நியச் செலாவணி மோசடி வழக்கை பதிவு செய்தது.
மேலும், ஐரோப்பிய நாடுகளில் ஹாப்ஸ்கேரப்ட் ஹோல்ட் என்ற பெயரில் ஹோட்டல் தொடங்குவதற்காக டிப்பர் இன்வெஸ்ட் மெண்ட், டெண்டி இன் வெஸ்ட்மெண்ட், பேனியன் ட்ரீ ஆகிய 3 நிறுவனங்கள் சார்பில் பார்க்லேஸ் வங்கியில் ரூ. 36.36 லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.1 லட்சம் பவுண்டுகளை முறைகேடாக முதலீடு செய்தது தொடர்பாகவும் தினகரன் மீது மற்றொரு அன்னியச் செலாவணி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்விரு வழக்குகளும் கடந்த 21 ஆண்டுகளாக எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
