தேசிய அளவில் முதலிடம் பிடித்த மதுரை முதுகலை மருத்துவர்… டிடிவி தினகரன் பாராட்டு!!

எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில்,  மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி,  தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் அவருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். 

ttv dinakaran has expressed his appreciation for pg doctor from madurai who has topped the national level in the exam conducted by AIIMS

எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில்,  மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி,  தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ள நிலையில் அவருக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி, எய்ம்ஸ் நடத்திய குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பிற்கான தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதையும் படிங்க: சுசீந்திரம் அருகே சாலையில் ஊர்ந்து சென்ற மலைப் பாம்பு!

குடல் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டிய தற்போதைய காலகட்டத்தில் குடல் அறுவை சிகிச்சை மேற்படிப்பில் ஹரி சாதனை செய்திருப்பது போற்றத்தக்கதாகும்.

இதையும் படிங்க: முயலை விழுங்கிவிட்டு நகர முடியாமல் ஒய்யாரமாக ஓய்வெடுத்த பாம்பு; வீட்டு உரிமையாளர் ஷாக்

மருத்துவர் ஹரி தேர்ந்த மருத்துவராக தமிழ்நாட்டின் மக்களுக்கு குறிப்பாக தென்மாவட்ட மக்களுக்கு தனது மருத்துவ சேவையை வழங்க வேண்டும் என்றும் அவரது மேற்படிப்பு முயற்சிகளில் மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்றும் வாழ்த்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios