TN BJP: ஜவுளிக்கடையில் 4 கோடி ரூபாய் மிரட்டி வாங்கிய அமர்பிரசாத்.!வீடியோ வெளியிடவா.? மிரட்டும் திருச்சி சூர்யா

மூன்று மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் இடம் திமுகவில் சேர்த்துக்கொள்ள அமர்பிரசாத் கெஞ்சி கொண்டிருப்பதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் மோடி பெயரில் கபடி போட்டி நடத்தி மோசடி நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
 

Trichy Surya accuses Amar Prasad Reddy of extorting money from textile shop KAK

ஆரூத்ரா மோசடி ஹரீஸ்

தமிழக பாஜகவில் உட்கட்சி மோதல் காரணமாக அக்கட்சியில் இருந்து திருச்சி சூர்யா நீக்கப்பட்டார். இதனையடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து நாள்தோறும் சமூகவலைதளத்தில் பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் தமிழக பாஜகவில்  அண்ணாமலையின் வலதுகரமாக பார்க்கப்படும் அமர்பிரசார் ரெட்டி தொடர்பாக திருச்சி சூர்யா கடும் விமர்சனம் செய்துள்ளார்.

எக்ஸ் வலைதளத்தில் திருச்சி சூர்யா வெளியிட்டுள்ள பதிவில், ஆருத்ரா மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளி ஹரிஷ் பிரதமரை பார்ப்பதற்கு அனுமதி கோரி சண்டையிட்ட பொழுது நேரில் இருந்தவன் நான். 

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் போறீங்களா?வீக் எண்டு சுற்றுலாவா.?சிறப்பு பேருந்து அறிவிப்பு-எங்கிருந்து தெரியுமா

Trichy Surya accuses Amar Prasad Reddy of extorting money from textile shop KAK

திமுகவில் சேர திட்டம்.?

மோடி கபடி போட்டி எனும் ஒரு மோசடி போட்டியை நடத்தி தமிழ்நாடு முழுவதும் நீ நடத்திய ஊழல்களை வெளியிட்ட அண்ணன் மாரிதாஸ் இடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டு எதுவும் போட வேண்டாம் என கெஞ்சிய புகைப்படத்தை வெளியிட தயாராக இருக்கிறேன்!  மூன்று மாதங்களாக உதயநிதி ஸ்டாலின் இடம் திமுகவில் சேர்த்துக்கொள்ள கெஞ்சி கொண்டிருக்கிறான் . திருச்சி marriot ஹோட்டலில் குடித்துவிட்டு பணம் தராமல் அடாவடி செய்தது!  L. முருகன் மாநில தலைவராக இருந்த பொழுது திருச்சியில் மூன்று வருடத்திற்கு முன்பு femina ஹோட்டலில் குடித்துவிட்டு அப்பொழுதும் பணம் கொடுக்க மறுத்த சாதனை இதுதான்!! 

 

பணம் கேட்டு மிரட்டல் - வீடியோ வெளியிடவா.?

குடித்ததற்கு  பணம் தராமல் அடாவடி  செய்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது மறந்து விட்டாயா? ராம சீனிவாசன் ஆடியோ வெளியிட வேண்டாம் என 2 கோடி ரூபாய் பணம் வாங்கித் தருகிறேன் என பேரம் பேசியயதாகவும் கூறியுள்ளார், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 10000 கோடி சம்பாதித்தால் அண்ணாமலை இடமிருந்து திருடி 2000 கோடி சம்பாதித்து இருப்பாய்! ஆதாரம் வெளியிடுப்படுவது உறுதி!  பிரபல ஜவுளிக்கடையில் 4 கோடி மிரட்டி பணம் வாங்கிய வீடியோ என்னிடம் இருக்கிறது தூக்குல் தொங்க தயாரா?  

முதல் வீடியோ போடவா இது உன் தலைவன் என்னிடம் கொடுத்தது தான்? இவ்வளவு நேரம் என்னிடம் நீ என்ன பேசினாய் என்பதை கூறவா? உன் தலைவன் உன்னை கொன்று விடுவான் பார்த்துக்கொள் என  அமர்பிரசாத்தை மோசமாக விமர்சித்து சமூக வலைதளத்தில் திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளார்.

பாஜகவை சேர்ந்த அஞ்சலை யார்? இவர் யாருடைய மனைவி தெரியுமா? இவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios