காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிளில் வகுப்புகள் தொடங்குமுன், அனைத்து மாணவர்கக்ல், ஆசிரியர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5–ஆம் தேதி மறைந்தார். இதனையொட்டி அவரது மறைவிற்கு மாநிலம் முழுவதும் பலதரப்பட்ட அமைப்புகளும், கட்சிகளும் மௌன ஊர்வலம், அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மறைவையொட்டி பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று பள்ளிகள் அனைத்து திறக்கப்பட்டன. பள்ளி வந்த மாணவ–மாணவிகள், ஆசிரியர்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.

இந்த வகையில் சிவகங்கை மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் பீட்டர் ராஜா தலைமையில், மாணவ–மாணவிகள், ஆசிரிய–ஆசிரியர்கள், கிராமக் கல்விக்குழு தலைவர் ஆறுமுகம் ஆகியோர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.

இதில் திருவேலங்குடி அரசுப்பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான நாகப்பன் அவர்கள் மறைந்த முதலமைச்சருக்கு இரங்கல் கவிதை வாசித்தார்.

முன்னதாக பள்ளி தொடங்கும் முன்பு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேபோல் காளையார்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் குணாதாசன் தலைமையில், தலைமை ஆசிரியர் தாமஸ் அமலநாதன் முன்னிலையில், மாணவ–மாணவிகள் மற்றும் ஆசிரிய–ஆசிரியர்கள் பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் வரை மௌன ஊர்வலம் சென்றனர்.

கொல்லங்குடி அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மோகன் முன்னிலையில், கிராம கல்விக்குழு தலைவர் காளிமுத்து, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருநாவுக்கரசு, மாணவ–மாணவிகள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

காட்டுச் சூரவண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியர் பொற்கொடி தலைமையில், கிராம கல்விக்குழு தலைவர் சவரிமுத்து முன்னிலையில் மாணவ–மாணவிகள் மறைந்த ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தினர்.