இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் - போக்குவரத்து கழகம் திடீர் உத்தரவு

இனி தாம்பரம் வழியாகவே அனைத்து அரசு பேருந்துகளும் சென்னைக்குள் வர வேண்டும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம்  அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Transport Corporation orders to run government express buses only through Tambaram

தாம்பரம் வழியாக பேருந்துகள் இயக்கம்

பொதுமக்கள் வெளியூர் சென்று வருவதற்காக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை செயல்படுத்தி வருகிறது. சென்னையில் இருந்து வெளியூருக்கும், வெளியூரில் இருந்து சென்னைக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகிறது. வெளியூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் பேருந்துகள் பெருங்களத்தூரில் இருந்து தாம்பரம், பல்லாவரம், வடபழனி வழியாக கோயம்பேடு வராமல், பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் வழியாக சென்னை கோயம்பேடு சென்றடைகிறது. இதன் காரணமாக சென்னை நகருக்குள் வரும் பயணிகள் முன்கூட்டியே இறங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கிருந்து மாற்று பேருந்துகளில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே பெருங்களத்தூர் வரும் பேருந்துகளை தாம்பரம் வழியாக இயக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்தனர். 

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை, 5% இட ஒதுக்கீடு..! அரசுக்கு கோரிக்கை விடுக்கும் சீமான்

Transport Corporation orders to run government express buses only through Tambaram

இந்தநிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பாக அனைத்து மண்டல கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு பேருந்துகள் காலை 7 மணி வரை தாம்பரம் வழியாகவும், அதன் பின்னர் வரும் பேருந்துகள் பெருங்குளத்தூரில் இருந்து திருப்பி விடப்பட்டு மதுரவாயல் வழியாக சென்னை கோயம்பேட்டை வந்தடைகிறது. அரசு பேருந்துகள் அனைத்தையும் தாம்பரம் வழியாக கோயம்பேட்டை நோக்கி இயக்கும் போது குரோம்பேட்டை, வடபழனி செல்லும் பயணிகள் பயனடைவதுடன் வருவாயும் பெருக வாய்ப்புள்ளதாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மாலை 5மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கச்சாவடி வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட வேண்டும் எனவும் போக்குவரத்து கழகம் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

ஒரு கோடி ரூபாய் கேட்டது உண்மைதான்.! அது எனது குரல் தான்..! ஆனால் திடீர் ட்விஸ்ட் கொடுத்த கேபி முனுசாமி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios