திருநெல்வேலி

திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு தற்போது மறுக்கும் காதலனை ஆட்டோவில் வலுகட்டாயமாக காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவந்து அவர் மீது திருநங்கை ஒருவர் அதிரடியாக புகார் கொடுத்தார்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஆதிரா என்ற திருநங்கை நெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த மனுவில், “மேலப்பாளையத்தை சேர்ந்த இலியாஸ் (30) என்பவர் என்னுடன் நட்பு ரீதியாக பழகி வந்தார். நாளடைவில் எங்கள் நட்பு காதலாக மாறியது. அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பழகினார்.

ஆனாம், தற்போது என்னை திருமணம் கொள்ள மறுத்து வருகிறார். மேலும் அவருடைய உறவினர்கள் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அதில் கூறியுள்ளார்.

காவல் ஆணையர் அலுவகத்திற்கு வந்த ஆதிரா தான் வந்த ஆட்டோவில் இலியாசையும் வலுக்கட்டாயமாக அழைத்துவந்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தால் ஆணையர் அலுவலகமே பரபரப்பு அடைந்தது.