Asianet News TamilAsianet News Tamil

உங்களுக்கு ஒரு குட் நியூஸ்..! இனி ஜாலியாக ரயிலில் போகலாம்..!

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் படி முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரெயில்களில் இணைப்பதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
 

Train Unreserved ticket Allowed
Author
Tamilnadu, First Published Dec 1, 2021, 7:34 PM IST

கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்களில், வரும் வெள்ளிக்கிழமை முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன. படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கினாலும், ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. ரயில்வே வாரியம் சார்பில் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பேருந்து பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டாலும் ரயில்களில் மட்டும் அனைத்து இருக்கைகளும் முன்பதிவு இருக்கைகளாக இயக்கப்படுவதால், ஏராளமான பயணிகள் நீண்ட தூரம் பயணம் செய்வதில் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லா ரயில் பெட்டிகள் கொண்டு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

மேலும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அகற்றப்பட்டன. அனைத்து ரெயில்களிலும் முன்பதிவு செய்து பயணம் செய்யவேண்டும் என்று ரெயில்வே துறை அறிவித்து இருந்தது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் உட்கார்ந்து செல்லும் 2-ம் வகுப்பாக மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரெயில்களில் நின்று நெரிசலில் பயணம் செய்வது தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் ரயில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று எக்ஸ்பிரஸ் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. அதன் படி முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரெயில்களில் இணைப்பதற்கு ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தால் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளுடன் ரயில்களை இயக்கமுடியும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தெற்கு ரயில்வே வாரியம் ரயில்பயணிகள் மகிழ்ச்சியடையும் வகையில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்துள்ளதால் தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முன்பதிவு இல்லாத பெட்டிகள் மீண்டும் 12 ரயில்களில் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. இந்த 12 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்பட்டு 2ம் வகுப்பு உட்கார்ந்து செல்லும் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக அனுமதிக்கப்பட்டுள்ள ரயில்களில், வரும் வெள்ளிக்கிழமை முதல் முன்பதிவு இல்லாத பயணிகள் ரயில்களில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் - பெங்களூரு பிருந்தாவன் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12640 பெங்களூரு பிருந்தாவன் - சென்னை சென்ட்ரல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12675 சென்னை சென்ட்ரல் - கோவை இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 12676 கோவை - சென்னை சென்ட்ரல் இண்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், வண்டி எண்16854 விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16853 திருப்பதி - விழுப்புரம் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16053 சென்னை சென்ட்ரல் - திருப்பதி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16054 திருப்பதி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16057 சென்னை சென்ட்ரல் - திருப்பதி சப்தகிரி எக்ஸ்பிரஸ், வண்டி எண் 16058 திருப்பதி சப்தகிரி - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ,வண்டி எண் 56640 மங்களூரு சென்ட்ரல் - மட்கான் பாசஞ்சர் , வண்டி எண்56641 மட்கான்- மங்களூரு சென்ட்ரல் பாசஞ்சர்(56641) அகிய ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் வரும் வெள்ளிகிழமை முதல் இயக்கப்பட உள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios