ரயில் பயணிகளே அலர்ட்... நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் ரயில் போக்குவரத்து மாற்றம்- வெளியான அறிவிப்பு
பரங்கிமலை - ஆலந்தூர் இடையே மேம்பாலம் பணி நடைபெற்று வருவதால் நாளை முதல் வருகிற 3 ஆம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணி - ரயில்கள் ரத்து
சென்னை எழும்பூர் - விழுப்புரம் வழித்தடத்தில் பரங்கிமலை ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இரண்டு நாட்கள் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. ஒரு சில ரயில் சேவையில் ரத்தும் செய்யப்பட்டது. இதனையடு்த்து இன்று சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் 53 மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. பிற்பகல் 3.45 மணிக்கு பிறகு தான் ரயில் சேவை தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
தாம்பரத்தில் இருந்து ரயில்கள் இயக்கம்
இந்தநிலையில் நாளை முதல் வருகிற 3 ஆம் தேதி வரை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, சென்னை எழும்பூரில் இருந்து இரவு நேரத்தில் புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ், ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்,மன்னை எக்ஸ்பிரஸ் ஆகியவை நாளை முதல் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 3ஆம் தேதி வரை, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 முதல் 11.55 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
சென்னை மக்களுக்கு முக்கிய செய்தி.. இன்று 53 மின்சார ரயில்கள் ரத்து.. மெட்ரோ ரயில் சொன்ன குட்நியூஸ்.!