train met with an small accident in avadi and route changed today

சென்னையில் ரயில் தடம்புரண்ட விபத்து 

சென்னையில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக,சென்ட்ரல் - ஆவடி இடையே இருமார்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆவடி ரயில் நிலையம் அருகே மிலிட்டரி சைடிங் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையே இருமார்கமாக செல்லும் ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லூர் - சூரப்பேட்டை, சூரப்பேட்டை - சென்னை சென்ட்ரல், திருப்பதி - நெல்லூர் செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் அரக்கோணம் - சென்னை சென்ட்ரல், அரக்கோணம் - திருப்பதி இடையே செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.மேலும்,ரயில் அனைவரும் இன்று பெரு நாள் பேருந்து பயணத்தை மேற்கொள்ள உள்ளத்தால்,பேருந்தில் அதிக நெரிசல் ஏற்பட்டு உள்ளது.

மேலும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு,நாளை முதல் வழக்கம் போல் ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப் பட்டு உள்ளது.