கோவை அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது 6 மாத கர்ப்பிணி மற்றும் 2 வயது குழந்தை மீது ரயில் மோதியது. இந்த உடல் சிதறி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கோவை அருகே ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது 6 மாத கர்ப்பிணி மற்றும் 2 வயது குழந்தை மீது ரயில் மோதியது. இந்த உடல் சிதறி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் ரத்தினபுரி அருகே உள்ள தில்லை நகரில் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற போது ரயில் மோதியது. இந்த விபத்தில் கர்ப்பிணி பெண் உடல் இரண்டு துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதன் பிறகு 2 வயது கைக்குழந்தையின் உடலும் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் கர்ப்பிணி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவும் உடல் சிதறி உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் மற்றும் ரத்தனகிரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல, இவர் தற்கொலை செய்து கொண்டாரா..? அல்லது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினாரா..? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர் விவரம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இறந்தவர்கள் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே நேரத்தில், தாய் சேய் மற்றும் கை குழந்தை என மூவரும் ரயிலில் அடிபட்டு பலியாகிய சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.