சுவிஸ் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள பணத்தை மீட்க மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என லட்சிய திமுக தலைவர் திரு. டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் திரு. நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததையடுத்து, கறுப்பு பணக்காரர்களும், ரியல் எஸ்டேட் ஓனர்களும் கதிகலங்கிப் போயுள்ளனர்.
இந்நிலையில், ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தான் வரவேற்பதாக லட்சிய திமுக தலைவர் திரு. டி ராஜேந்தர் தொிவித்துள்ளாா். மேலும் அவா் கூறுகையில், இந்தியாவில் உள்ள கருப்பு பணத்தை ஒழிப்பது சரி, சுவிஸ் வங்கியில் உள்ள கருப்பு பண பட்டியல் ஏன் வரவில்லை எனக் கேள்வி எழுப்பினாா். பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் சாமானிய மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் டி. ராஜேந்தர் தெரிவித்தார்.
